Pages

Subscribe:

Tuesday, September 14, 2010

அலைகள் - சிறுகதை

மணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.

மணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். பீற்றரும் ஜோர்ஜும் முத்துச் சேரியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐவரும் இணைபிரியாத உயிர்த் தோழர்கள். அதே பாடசாலையில்த்தான் வண்ணார்மலையைச் சேர்ந்த எழை விவசாயியின் மகள் மீனாட்சியும் உயர் தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தாள். அவள் அறிவு அழகு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.

ஒரு நாள் ராகேஷ் பாடசாலைக்குச் செல்லும் போது மீனாட்சியின் சைக்கிள் பழுதடைந்து பாதி வழியில் நின்றாள். ராகேஷ்தான் உதவி செய்து அவளைப் பாடசாலைக்குச் கூட்டிச் சென்றான். அன்று எற்பட்ட நட்பு காலப்போக்கில் ராகேஷின் மனதில் காதலாக மாறியது. ராகேஷ் தனது காதலை மீனாட்சியிடம் கூறினான், ஆனாலும் மீனாட்சி அவன் காதலை ஏற்கவில்லை. அவன் குடும்பம் ஊரிலே செல்வாக்கான பணக்காரக் குடும்பம், தானோ எழை என்று காரணம் சொல்லி அவனது காதலை மறுத்தாள். அவனது இடைவிடாத முயற்ச்சியினால் இருதியில் அவன் காதல் வலையில் அவள் வீழ்ந்தாள்.


இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள். பாடசாலையில், வகுப்பறையில், கோவில்,வயல் என்று இவர்கள் காதல் வளர்ந்த்து. காதல் வளர வளர சிறிது சிறிதாக வெளியே தெரியத் தொடங்கியது. முடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.

இந்த விசயத்தையறிந்த மீனட்சியின் பெற்றோர்கள் அவளிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசிப்பார்த்தார்கள். காதல் வந்த பேதையின் மனம் மாறுமா....? இறுதியில் அவர்களுக்கு தோல்வியே கிட்டியது. ராகேஷின் பெற்றோர் அவனது மனதை பலவந்தமாக மற்றப் பர்த்தார்கள், மீனட்சியை கல்யாணம் பண்ணினால் அவனை ஊரை விட்டு விலக்கி விடுவதாக பயமுறுத்திப் பார்தார்கள். அவனோ அவனது காதலை கொஞ்சம் கூட விடத் தயாரில்லை என்று கூறி மறுத்து விட்டான்.

இறுதியில் ராகேஷின் பெற்றோர் மீனாட்சியின் பெற்றோரைப் போய் மிரட்டிப் பார்த்தார்கள். மீனாட்சி இனிமேல் ராகேஷைப் பார்க்கக்கூடாது என்று. அவர்களும் உயிருக்குப் பயந்து மீனாட்சியை சம்மதிக்க செய்தார்கள்.வெளியில் பெற்றோருக்காக ஒத்துக் கொண்டாள் மீனாட்சி, ஆனாலும் அவள் தன் மனதை மாற்றுவதாக இல்லை. இதையெல்லாம் அறிந்த ராகேஷ் நண்பர்கள் மூலமாக மீனாட்சியைத் தொடர்பு கொண்டு இருவரும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து நாளும் குறித்தனர்.

அந்த நாளும் வந்தது பல இன்னல்கள். கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கி, கடந்து, அவர்கள் நினைத்ததைச் சாதித்தனர். பக்கத்தில் உள்ள நகரத்தில் போய் பதிவுத் திருமணம் செய்து, கோவில் ஒன்றில் தாலியும் கட்டிக் கொண்டார்கள், அவர்களின் உயிர்த் தோழர்களின் உதவியுடன். இந்தப் பிரச்சினைகளிம் குகனும், பீற்றரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.

தைரியமாக முடிவெடுத்து கல்யாணம் பண்ணியவர்களுக்கு, இனிமேல் என்ன பண்ணுவது,எங்கே போவது என்று புரியவில்லை. அவர்களிண் ஊருக்குப் போகவே முடியாது. அவர்களின் காதலையும், நண்பர்களையும் தவிர வேறொன்றும் இல்லை. பீற்றர் கொடுத்த அறிவுரை அவர்களின் கிராமத்திற்க்கு வரும்படி, ஆனால் ஜோர்ஜ் அதை விரும்பவில்லை." ராகேஷ் பிராமணர் குடும்பதைச் சேர்ந்தவன் அவனால் மீனவர்களுடன் தங்குவது சிரமம்" என்று காரணம் காட்டினான். இறுதியில் பல வழிகளிலும் யோசித்து வேறு வழி எதுவும் இல்லாததால் அவர்களின் கிராமத்திற்கு போவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த ஊர் பெரியவர்களின் உதவியுடன் முத்துச்சேரியில் ஒரு சிறு வீடமைத்து குடியமர்த்தப் பட்டனர்


ராகேஷ் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்ந்ததால் அவன் எந்தத் தொழிலும் பழகாதவன். அந்தக் கிராமத்தில் மீன் பிடிப்பதைத்தவிர வேறு தொழில் எதுவும் கிடையாது. அவன் தன்னை நம்பி வந்த தனது உயிர் மனைவிக்காக அந்தத் தொழிலை செய்வதற்க்கு முடிவெடுத்தான். அவளிற்க்கோ அதில் சற்றும் விருப்பமில்லை. தனக்காகத் தன் கணவன் கஷ்டப்பட்டு தனது குலத்திற்க்கு ஒத்துவராத தொழிலில் ஈடுபடுவதை அவள் அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனாலும் அவன் தந்து அன்பால் அவளை சம்மதிக்க வைத்தான். அவளும் அரை மனதுடன் சம்மதித்தாள்.


மீன்பிடித் தொழிலில் முன் அனுபவமேதும் இல்லாத்தால் ராகேஷ் மிகவும் சிரமப்பட்டான். அவனின் நண்பர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேக்கவில்லை. அவனிற்க்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர்களின் உதவியுடன் மீன்பிடித் தொழிலை சிறிது சிறிதாக கற்று முன்னேறி தனியாகச் சென்று மீன்பிடிக்கும் அளவிற்கு முன்னேறினான்.

அப்படியாக அவர்களது வாழ்க்கை இன்பமாகப் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் தாண்டி. முன்னர் பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டார்கள், இப்போது அதுவும் படிப்படியாக குறைந்து விட்டது. மிகவும் இன்பமாகவும், எழிமையாகவும் வாழ்ந்தார்கள். அந்தக்காலத்தில் மீனாட்சி கருவுற்றாள். இப்போது அவர்கள் வாழ்க்கை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்றது. அவர்களின் நண்பர்கள் தான் அவர்களிற்கு உறவினர்களாக, தெய்வமாக உதவி செய்தார்கள். மீனாட்சி தான் கருவுற்றதிலிருந்து ராகேஷ் கடலிற்க்குப் போவதை விரும்பவில்லை, எனினும் அவர்கள்து பொருளாதார நிலமை காரணமாக அவன் போகவேண்டியிருந்தது. முதலில் கிழமைக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் போனவன் இப்போது இரண்டு அல்லது மூன்று நாட்களாகக் குறைத்தான்.

மீனாட்சி எட்டு மாத நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். அன்றுதான் 2004ம் ஆண்டுக்கான கிறுஸ்துவரின் நத்தார்ப்பண்டிகை வந்தது. அவர்களிருவரும் அவர்களுடைய நண்பர்களுடன் தேவாலயத்திற்க்குச் சென்று இறைவணை வணங்கினார்கள். கிறுஸ்துப்பாலனைப் போல ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று இறைவனை தரிசித்துவிட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்க்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.

அன்று இரவு ராகேஷ் கடலிற்குப் புறப்படத் தயாரனான். மீனாட்சியோ "இண்டைக்கு நத்தார்தானே ஜோர்ஜ், பீற்றர் அண்ணா யாரும் வரமாட்டாங்க நீங்க தனியா போகணுமா" என்று கேட்டாள். "இன்று நத்தார் அவங்க யாரும் போகமாட்டாங்க, உனக்கும் பிள்ளை பிறக்க நாள் கிட்டுது, நம்மகிட்டையும் பணம் சேமிப்பில இல்லை இன்றைக்கு போனால் வருமானம் கொஞ்சம் கூட வரும் என் பிள்ளைக்காக நான் போகவேண்டும்" என்று மீனாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு புறப்படத் தயாராகின்றான் ராகேஷ். அவளும் அரை மனதுடன் சம்மதம் சொல்கிறாள். ராகேஷிற்க்கு மீனாட்சியை தனியே விட்டுப் போக மனமில்லாமல் அவளைக் கூட்டிச்சென்று ஜோர்ஜ் வீட்டில் விட்டுவிட்டு, அவன் மறுத்தும் கேட்காமல் மறுத்துவிட்டு செல்கிறான்.

மறு நாள் விடிந்து விட்டது. வழமையாக ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள். இன்று மணி ஏழரையும் தாண்டி விட்டது என்னும் காணவில்லை. மீனாட்சி கரையில் அவளவனது வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். அவளது மனதை பயம் பற்றிக் கொள்ள ஆரம்பிக்கின்றது. நேரம் எட்டு மணியும் ஆகிவிட்டது. விஷயம் அறிந்த பீற்றர் அங்கு வந்து விட்டான். வேறு இரு படகில் ராகேஷைத் தேடிப் புறப்படத் தயாராகும் போது தொலைவில் ராகேஷின் படகு வருவது அவனுக்குத் தெரிந்தது. அவன் கிட்டே வந்த போதுதான் மீனட்சியின் ஊசல் ஆடிக்கொண்டிருந்த உயிர் ஒரு நிலைக்கு வந்தது. அவன் வந்து சேர்ந்து படகை கரைக்கு கொண்டு வரும் போது நேரம் எட்டு நாற்பதைத் தாண்டியிருந்த்து.


அவன் வந்திறங்கியதும் அவள் நடக்க முடியாமல் ஓடிப்போய் அவனைக் கட்டியணைத்து அழுகின்றாள் சிறு குழந்தை போல. அவன் அவளை சமாதனப் படுத்தி பக்கத்தில் இருந்த மரப்படகில் உட்கார வைத்து விட்டு பீற்றரின் உதவியோடு வலையைப் பிரிக்க ஆரம்பிக்கின்றான்.

அவள் மரப்படகில் இருந்து கொண்டு தன் கணவன் வலை பிரிப்பதை பார்த்து மனதில் கவலைப் படுகின்றாள். "எபபடி இருக்க வேண்டியவர் என்னால் கஷ்டப்படுகிறாரே"" என்று. அப்படியே அவள் தனது கவனத்தைச் சற்று திருப்புகிறாள். குழந்தைகள் சிறுவர்கள் என் பலர் ஆனந்தமாக் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருக்கிண்ரனர். தனது வயிற்றைத் மெதுவாகத் தடவிக் கொண்டே "என் பிள்ளையும் பிறந்து வளர்ந்து இப்படித்தான் விளையாடுவான்" என்று சந்தோஷமாக நினைத்துச் சிரிக்கிறாள். அப்போதுதான் அவளிற்க்கு தேநீர் கொண்டு வந்தது நினைவிற்க்கு வருகிறது ஆனால் தேநீர் ஆறிப் போயிருந்தது. "எழு மணிக்கு போட்ட தேநீர் ஒன்பதையும் தாண்டிவிட்டது ஆறாமல் இருக்குமா..?" எழும்பிப் போய் அவனிடம் சென்று "உங்களிற்க்கு தேத்தண்ணி கொண்டு வந்தேன் இப்ப ஆறிப் போயிற்று, வீட்டுக்குப் போய் சுடச் சுடத் தேத்தண்ணி கொண்டு வாறேன்" என்று சொல்கிறாள். அவன் சொல்கிறான் "வேலையை முடித்து விட்டு ஒரேயடியாக வீட்டுக்குப் போகலாம்" என்று. அவளோ "இல்லை நீங்க வர 11மணியாகும் நான் போய் போட்டு வாறேன்" என்று சொல்லுகிறாள். அவனும் சரி போய்ட்டு வா என்று கண்களால் சொல்கிறான்.

சாலைக்கு வந்து மெதுவாக ஒரு ஐந்து நிமிடம் நடந்து இருப்பாள், கடற்கரையில் பாரிய சத்தம் கேட்கிறது குண்டு வெடிப்பதைப் போல். திரும்பிப் பார்க்கிறாள் கடல் அலை வேகமாக மேல் எழும்புகிறது பனை மர உயரத்திற்க்கு, அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவள் வந்த பாதையால் சற்று வேகமாகச் சென்றால் அவள் தப்பலாம். ஆனாலும் அவளது உயிர் அவன் தானே அவள் தனது உயிரை நோக்கி ஓடுகிறாள் அவளால் முடிந்தவரை வேகமாக கடலை நோக்கி ஓடுகிறாள். கரையில் எழும்பிய அலை ஒன்று படகுகள், கற்கள், குப்பைகள் போன்ற ஆயுதங்களுடன் அவளது காலடியில் விழுகிறது. அவள் கத்துகிறாள் "ராகேஷ் ராகேஷ் ராகேஷ் ராகேஷ்.........." என்று. அவளிற்க்கு எதுவும் தெரியவில்லை. எங்கும் தண்ணீர் தண்ணீருடன் சேர்ந்து எழுந்து தானும் மேலே போவது தெரிகின்றது. அவளின் கால் ஒரு மரத்தில் மாட்டுப் படுகிறது. அத்துடன் அவளிற்க்கு சுயநினைவு அற்றுப் போகிறது.

இரு நாட்களின் பின்னர் அவளிற்க்கு நினைவு திரும்புகிறது. அவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை. படுத்திருந்த படியே அந்த இடத்தை சுற்றிப் பார்க்கின்றாள். எங்கும் மரண ஓலம். காயம்பட்டவர்கள், அவர்களை காப்பாற்ற முயற்ச்சித்து கொண்டிருக்கும் வைத்தியர்கள். அவள் கண் எல்லா இடமும் பார்த்துக் கொண்டே தன் கையால் வயிற்றைத் தடவுகிறாள், அவ்விடத்தில் தன்க்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. தாங்க முடியாத சோகத்திலும், வலியிலும் தனது சக்தி எல்லவற்றையும் சேர்த்து வைத்திய சாலையே அதிருமளவிற்க்கு "ராகேஷ் .................." என்று கத்துகிறாள். அவளின் சத்ததைக் கேட்டு எல்லரும் அவள் அருகில் கூடிவிட்டனர். அவளாள் பேச முடியவில்லை, பெசும் அளவிற்க்கு சக்தியும் இல்லை. அழுகிறால் தன்னால் முடிந்தளவு பலமாக அழுகிறாள். "ராகேஷ்" என்று முணுமுணுக்கின்றாள். அப்போதுதான் ஜோர்ஜும் அர்வ்ந்தும் உள்ளே வருகின்றனர், அவளைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் அவளுடைய மணம் சிறிது மகிழ்கிறது. எனினும் அவனைக் காணத்தாள் மீண்டும் கலங்குகிறாள். அவர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றாள். அவர்கள் மீனாட்சியைப் பார்த்து சோகம் தாங்க முடியாமல் அழுகின்றனர். குகன் விஷயத்தைச் சொல்கின்றான் " கடல் நீரினால் அவள் அடித்துச் செல்லப் பட்டு மரத்தில் மோதியதில் அவள் வயிற்றில் பலமாக அடிபட்டதினால் அவளது குழந்தை குறைப் பிரசவமாக பிறந்து இறந்து விட்டது" என்று கூறினான்.

அவள் "ராகேஷ்" என்று மெதுவாக கேட்கிறாள், அவர்களிற்க்கு அத்ற்க்கு பதில் சொல்ல முடியவில்லை. ஜோர்ஜ் அழுதுகொண்டே "கடற்கரையில் வலை பறித்துக் கொன்டிருந்த ராகேச்சும்,பீற்றரும் கடலலையில் அடித்திச் செல்லப் பட்டுவிட்டார்கள்,அவர்களோடு சேர்த்து பல நூறுபேரைக் காணவில்லை, தேடுகிறார்கள்" என்று கூறினான். இதைக் கேட்டதும் படுந்திருந்து அழுதுகொண்டிருந்த அவள் கட்டிலில் எழுந்து இருக்க முயற்ச்சி செய்கிறாள் ஆனல் அவளால் அவள் காலை தூக்க முடியவில்லை மெதுவாக தனது காலை தொடுகிறால் அவளது இடது காலை காணவில்லை. அப்படியே கட்டிலில் சாய்ந்து விழுகின்றாள்.

அன்று மயங்கி விழுந்தவள் இரண்டு ஆண்டுகள்,ஆகியும் என்னும் நினைவு திரும்பவும் இல்லை, கடலோடு அடிபட்டுச் சென்ற ராகேஷும் திரும்பவில்லை.

"வைத்தியர்கள் சொல்கின்றனர் இது கோமா நிலையாம் எப்போ நினைவு திரும்பும் என்டு சொல்லேலாதாம்" என்று அழுதபடி ராகேஷின் தகப்பனார் மீனாட்சியின் தகப்பனிடம் கண்ணீர் வடித்தபடி கூறுகின்றார்.

அன்று காதலித்தபோது எதிர்த்து நின்று அந்த சிறிய பிஞ்சுகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்க்கு அவனும் உயிருடன் இல்லை, அவழும் சுயநினைவுடன் இல்லை.

அவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.

இந்த மீனாட்சி மட்டுமில்லை இவளைப் போல பல மீனாட்சிகள் இன்றும் நம் சமுதாயத்தில் உயிரில்லாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.......

6 comments:

மதுரை சரவணன் said...

காதலுடன் மீனவர்களின் அவலங்களை அருமையாக கதைதளம் அமைத்து சுவைப்பட சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

Ananthi said...

///அவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.///

இந்த வரியில் உங்கள் கருத்தை அழகாய் பதிவு, செஞ்சிட்டீங்க..
ஹ்ம்ம்... காதலித்து திருமணம் செய்வதில் உள்ள சிக்கல்கள் பற்றியும், கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் படும் கஷ்டங்களும் அருமையா சொல்லியிருக்கீங்க..

அன்புடன் பிரசன்னா said...

நன்றி சரவணா... நான் சிறு வயதில் எந்தன் தேசத்தில் மீனவர் படும் கஷ்டங்களை நேரிலே அறிந்து கொண்டதைத்தான் கதையாக வர்ணித்து உள்ளேன்...

அன்புடன் பிரசன்னா said...

நன்றி ஆனந்தி.... உங்கள் ஊக்கத்திற்கு.

சினேகிதி said...

வாழ்த்துக்கள் பிரசன்னா, மிகவும் அருமையாக கதையை வர்ணித்து எழுதியுள்ளீர்கள்... மீனவர் படும் கஷ்டங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... இன்னும் மேலும் பல கதைகளை நீங்கள் எழுத வேண்டும்... வாழ்த்துக்கள்.....!!!!

அன்புடன் பிரசன்னா said...

நன்றி சினேகிதி, உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும். மரணத்தின் வாசலில் வாழும் மீனவனையும் அவன் படும் கஷ்டங்களையும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. அவர்களும் மனிதர்கள்தான்....