Pages

Subscribe:

Saturday, November 26, 2011

மாவீரரே...


பாசறையில் பூத்து
கல்லறைகளில் உறங்கும்
மாவீரர்களே............

நீங்கள் ஒடுக்கப்பட்ட
நம் தமிழினத்திற்காக
மண்ணிற்க்குள்
புதைக்கப் பட்டு,
விதைக்கப் பட்டவர்கள்.

நீங்கள் மண்ணிற்க்குள்
புதைக்கப் படவில்லை
நமது தாயகமெனும்
கட்டிடத்திற்க்கு
உறுதியான
அத்திவாரமாக்கப் பட்டவர்கள்.

மண்ணிற்க்குள்
விதைக்கப்பட்ட
உங்களின் கனவுகள்
எரிமலைகளாக
குமுறிக்கொண்டிருக்கின்றன
நாளை நிச்சயம்
எரிமலைகள்
வெடித்துச் சிதறும்
அப்போது உங்கள்
ஆசைகள் நிறைவேறும்

உறங்குங்கள்
அமைதியாக அதன்பின்பு......

Wednesday, October 13, 2010

ஓய்வில்லாத போரே.....

உன்னாலே தான் இந்த உலகத்தில்
இவளவு உயிர்கள் மாண்டு
போகின்றார்கள் யாரும்
நிம்மதியாகவில்லை உனக்கு
உலகம் தொடங்கிய
நாளிலிருந்து ஓய்வே இல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிண்றாய்
நீ மட்டும் ஓடினால் பறவாயில்லை
கோடிக்கணக்கான உயிர்களையும்
சேர்த்து எடுத்துக் கொண்டல்லவா ஓடுகிறாய்
என்ன முழியை உருட்டுகிறாய்
யுத்தமே உன்னிடம்தான் பேசுகிறேன்
சொல் ஒரு பதில்

Friday, October 1, 2010

வீடுகாணலாம் - கவிதை

வீடுகாணலாம்
எங்கள் தேசத்திற்க்கு சென்று
நாங்கள் தவண்டு வளர்ந்த
வீட்டை காணலாம்
அன்னியர்கள் தாக்கியழித்து
எச்சங்களய் எங்கள்
உறவுகள் பெயர்களை கூறும்
நம் வீட்டை பாக்கலாம்
எங்கள் உறவுகள்
எங்கள் கண்முன்னே
இரத்ததை சிந்தி
தங்கள் உயிர் நீத்த
எங்கள் வீட்டை பாக்கலாம்
சேர்த்து வைத்திருக்கும்
கண்ணீருக்கு
விடை கொடுக்க
எங்கள் தேசம் சென்று
வீடுகாணலாம் 

Thursday, September 30, 2010

காதலித்து பார் - நகைச்சுவை

காதலித்து பார் பார் கோவில் ஆகும், பீர் தெய்வம் ஆகும். உன் இம்சை தங்காமல் போன் ஸ்பீக்கர் பழுதாகும், உன் போனில் அவளின் பேர் தவிர மற்ற பெண்களின் போன் நம்பர் அழியும் அல்லது அழிக்கப்படும். காதலித்து பார்... மூன்று அடி  தூரத்தில் சாராயம் இருந்தும் குடிக்க முடியாத துன்பத்தை  அனுபவித்ததுண்டா...? மூன்று நேரமும் போன் கதைத்து செவி பறை கிழிய வேண்டுமா காதலித்து பார்.  அம்மா வீட்டுக்கும் அவளின் ஊருக்கும் மாறி மாறி பயணம் செய்யும் நிலை தேவையா....? எங்கே நீ நின்றாலும் என்ன நீ செய்தாலும் அவள் போன் எடுக்கும் போது அதை சொல்லவேண்டிய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா....? அதற்காகவேனும் காதலித்து பார்.  அப்பாவிடம் மறைத்து பழகிய உண்மைகள் அவளிடம் அம்பலம் ஆகியதுண்டா? அவளுக்கு தெரியாமல் பீர் அடித்து அவளிடம் பிடிபட்டு சண்டையில் ஒரு நாள் நாசமாக வேணுமா? அடிக்கடி லவ் யு சொல்லும் வெட்டி தனம் தேவையா? காதலித்து பார்.  இன்பாக்ஸ் பார்த்து அவள் சண்டை பிடிக்கவும் நம்பர் பிஸி அல்லது waiting பார்த்து அவள் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்படவும் 10 மணிக்கு வரும் தூக்கத்தை இரவு 1 மணிவரை சுமந்து கொண்டு போன் கதைக்கும் துன்பம் ஏற்படவும் காதலித்து பார்.  நண்பர்களை தனிமையாக்கி தனியே போய் போன் கதைப்பாய்,  அவர்கள் திட்டும் போதும் நக்கல் அடிக்கும் போதும் சுரணை இல்லாதவன் போல சிரிக்க உன்னால் முடியுமா? காதலித்து பார். அவளுக்கு தெரியாமல் பொய் சொல்லி பீர் அடிக்கும் சந்தோசத்தை உன்னால் அடைய முடியுமா? அவள் போன் எடுக்கும் போது ஒடனே receive பண்ண வேண்டிய வேகம் வேண்டுமா? அவள் அழும்போது நம்ம weekness பூரா சொல்லவேண்டிய நிலை தேவையா? காதலித்து பார்.  ஒரு தலையா காதலித்தால் மகனே தப்பினாய் இரண்டு பக்கமும் என்றால் சங்கு தான் மவனே.......
(கலப்படமில்லா கற்பனை )

எனக்கு மின்னஞ்சலிலும், பேஸ்புக்கிலும் நண்பர்களால் பகிரப்பட்டவை.

Wednesday, September 29, 2010

குட்டி கவிதைகள் - காதல் பிரிவுகள்


நிலவிற்காய் ஏங்குகிறது வானம்
அமாவாசையில்!

சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
இரவு வேளையில்!

விண்மீன்களுக்காய் ஏங்குகிறது முகில்கள்
மழைபொழியும் இரவில்!

உனக்காக ஏங்குகிறது என்னிதயம்
எல்லா காலங்களிலும்!
 

**************************


தினமும் காத்திருக்கின்றேன்
இரவுகளை நோக்கி!
கனவில் உன் முகம்
பார்க்க விரும்பியல்ல!
நிலவில் உன் முகம்
பார்க்க விரும்பியே!
********************
  
பட்டமரமாய் அலைந்தேன்!
பாலைவனம் தன்னில்,
தனிமையாய்!

தென்றலாய் நுழைந்து,
சோலைவனமாக்கினாய் என்னில்,
இனிமையாய்!