Pages

Subscribe:

Monday, September 20, 2010

நட்பு - கவிதை


கொட்டும் மழையிலும்
கையில் குடையுடன்
கை கோர்த்து ஒன்றாக
நனைந்திருந்தோம்
எங்கள் நட்பு என்னும்
பிணைப்பில்....

காலை விடிவதெல்லாம்
நண்பர்களுக்காகவே என்று
காலையில் கூடி
கதையளந்தோம்
மணிக் கணக்கில்

சில்லறைகள் சேர்த்து
ஒரு கொக்ககோலாவில்
பல ஸ்ட்ரோ வைத்து
உறிஞ்சியது ஒரு காலம்

எங்கள் பாடசாலை
முடியுமுன்னே நண்பர்களுடன்
பெண்கள் பாடசாலை
வாசலில் நின்று
"மச்சான் அவ என் ஆளுடா"
என்று கூறி மகிழ்ந்திருந்தோம்
நட்பினால்....

இரவில்
நண்பர்களை பிரியவேண்டும்
என்று வருந்தும் நம் மனதில்
நீண்ட ஒரு விடியாத இரவாக
வந்தது எங்கள் கல்லுரி நாட்களின்
முடிவு....

வசந்த காலத்து மலர்களாக
பூத்து குலுங்கிய எங்கள் வாழ்க்கை
இன்று
இலையுதிர் காலத்து சருகுகள்
போல் பல திசைகளில்
அடிபட்டு போய் விட்டோம்

குறுகிய உலகம்
இன்று பரந்துவிட்டது
அவன் அமெரிக்காவில்,
இவன் இங்கிலாந்தில்,
நான் ஆஸ்திரேலியாவில்,
எவன் தாய்நாட்டில்...?
என்று போய்விட்டது

நண்பர்களின் தூரம்
பலவாயிரம் மைல்களாக
இருந்தாலும்
எங்கள் நட்புக்கு
இடைவெளி என்பதில்லை.
இருண்ட எங்கள்
இரவுக்கு விடியல் நிச்சயமே....

9 comments:

Gayathri said...

beautiful...and very true..nalla irukku

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

pl.remove wordverification

அன்புடன் பிரசன்னா said...

நன்றி காயத்ரி... ஆமா இந்த உலகத்தில நட்பை விட சிறந்த உறவு எதுவுமே இல்லை......

அன்புடன் பிரசன்னா said...

Thnx Radha kirishanan....
Sorry friend, jst now i removed word verification
Thanx for the inform & comment.....

சிநேகிதி said...

ரொம்ப நல்லா இருக்கு பிரசன்ன்னா...... நீங்கள் சொல்லுவது போல உலகத்தில நட்பு ஒரு சிறந்த உறவு.....

நிலாமதி said...

நட்பின் வலிமையை உணர்ந்திருகிறீர்கள் .பள்ளிகால் நட்பு என்றும் மறக்க முடியாது அதுவும்.,வெளி நாடு போன பின் ஓர் தாகம் வருமே
..... மீண்டும் அந்த நாட்களை எண்ணி அசைபோட....துள்ளித்திரிந்த அந்த நாட்கள் பா ராட்டுக்கள்

அன்புடன் பிரசன்னா said...

அக்கா நன்றி அக்கா... நீ சொல்றது போலவே நட்புதான் உலகத்தில சிறந்த உறவு.... அடுத்த தடவை உன்னோட பெயரில கொமன்ட் போடு அக்கா.....

அன்புடன் பிரசன்னா said...

ஆமா நிலமதி அக்கா, பள்ளி கால நட்பு என்பது ஒரு தனி உலகம் வாழ்க்கையில எந்த சந்தர்ப்பத்திலையும் அப்படி ஒரு காலம் இனி வர போறதில்லை, நட்பில பிரிவுகளும் உண்டு, ஆனாலும் பிரிவுகள் மிக தொலைவாக இருக்கிறது ரொம்ப கடினம்தான்..... உங்கள் நட்புக்கும் நன்றி........

மாதேவி said...

நட்புகள் என்றுமே மறக்கமுடியாதவை. தொடர்ந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை.