Pages

Subscribe:

Saturday, September 4, 2010

நிலவே... - கவிதை


கோடி யுகங்கள் தவம் செய்தாலும்
பகலில் வரம் கொடுக்காத
அழகிய இரவு தேவதையல்லவா நீ
நிலவே நீ இல்லாத வானத்தில்
கோடி நட்சத்திரங்கள் மின்ணினால் கூட
உன் அழகுக்கு அவை ஈடேது

உன்னோடு இரவுணவு உண்ணும்
குழந்தை அல்லவே நான்
எனக்கு தினமும் பசி உள்ளதென்பதை
மறந்து விட்டாயா நீ
தினம் தோறும் தேய்ந்து வளர்ந்தாலும்
என்றும் இரவு சூரியன் நீதான் நிலவே

சூரிய வெப்பத்தை உன்னுள் வாங்கி
பூமி குழந்தைக்கு குளிர்மை கொடுக்கும்
தாயனவளே
தொலை துரத்தில் என்றும் நீ இருந்தாலும்
உன்னை தொட்டு காதல் செய்யும்
காதலன் நானல்லவா....

5 comments:

Anonymous said...

நல்ல கவிதை

vasan said...

/எனக்கு தினமும் பசி உள்ளதென்பதை
மறந்து விட்டாயா நீ......
தாயனவளே
தொலை துரத்தில் என்றும் நீ இருந்தாலும்
உன்னை தொட்டு காதல் செய்யும்
காதலன் நானல்லவா.... /

ப‌சி தாக‌ம் தீர்க்க‌லாமெனில்,
இன்று அமாவாசையாகிப் போன‌தே!!

நிலாமதி said...

உங்கள் வர்ணனை அருமை .நட்புடன் அக்கா நிலாமதி

அன்புடன் பிரசன்னா said...

பரவாயில்லை வாசன் அம்மாவாசை முடிய என்னோட பசியை தீருங்கோ....

அன்புடன் பிரசன்னா said...

நன்றி..... "நிலா" மதி அக்கா