Thursday, September 2, 2010
கவிதை - என் முதற்காதலி ..
இந்த அமாவாசை
உன் பௌர்ணமிக்காக
ஏங்குகிறது - உன்
இரத்தத்தினால் நெய்யப்பட்ட
என் இதயம்
உன் பெயர் சொல்லித்தான்
துடிக்கின்றது- நான்
சுவாசிப்பதே நீ
விட்டுச் சென்ற
மூச்சுக் காற்றினால் தான்...
என் கண்கள் உன்னைக் காண்பதற்காக
தான்இரவில் விழி மூடுகின்றது...
உன் விரல்கள்
பிடித்து நடக்காததால் - என்
கை விரல்கள் நடக்கும் போது
விரிய மறுக்கின்றன...
நீ இல்லாது - நான்
தனித்துப் போவேனென்று
தெரிந்திருந்தால்
உன் கருவிலேயே
உன்னுடன் கலந்திருப்பேன்..!!
நீ எனக்கு
காட்ட வேண்டிய
நம் உறவுகள்
எல்லாம்
உன்னை எனக்குக்
காட்டுகிறார்கள்- என்
தவிப்புக்கள்
உனக்குத் தெரியவில்லையா....?
என் முதன் முதற் காதலியே..........
உன் பெயரை
முதற் தடவை
உச்சரிக்கின்றேன்...
என் கனவிலாவது
என்னிடம்
ஓர் தடவை வா.............
அம்மா...........!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அருமை.....அருமை.....பிரசன்னா....ஒரு தாயின் வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்..........
பிரமாதம்
நன்றிகள் தாயே. என் கண் காணாத எனது அன்னைக்காக எழுதிய கவிதை, இது கவிதை மட்டுமல்ல நிஜம் கூடத்தான்....
நன்றி அன்பரசன் உங்கள் ஊக்கங்கள் தான் என்னுடைய மூலதனம் என்னும் எழுதுகிறேன்.
நல்ல கவிதை...
நன்றி நண்பா....
/என் கண்கள் உன்னைக் காண்பதற்காக
தான்இரவில் விழி மூடுகின்றது.../
என்ன சொல்லி ஆற்றுவது?
மனம் அரற்றுகிறது, பிரிய பிரசன்னா.
என் கண் காணாத எனது அன்னைக்காக எழுதிய கவிதை, இது கவிதை மட்டுமல்ல நிஜம் கூடத்தான்..
please contact me..
நன்றி வாசன்.... & நிலாமதி.....
Post a Comment