Pages

Subscribe:

Tuesday, August 31, 2010

சொந்தம் - கவிதை


உன்னை போல் எனக்கு
அழகான சொந்தம் யாருமில்லை
உன்னை இன்றி வேறு
சொந்தங்களை தேடியதும் இல்லை
என் உயிரினுள் உறைந்த
என் சொந்தமே
உன்னை தேடுகிறேன்
என் உயிர் போகும் வேளையிலும்
ஆனாலும் உன்னை காணவில்லை

என் உயிரில் கலந்து விட்ட
எனது உறவே
உன்னை வெளியில் தேடுவது
என் மடமையடி
எனினும் உனது சொந்தத்தை
எனது உள்ளம் தேடுகிறது
என் உயிருக்கு சொந்தகாரி நீயடி
எனது கல்லறையில் காத்திருக்கிறேன்
உன் உறவை எதிர் பர்ர்த்து
சொந்தம் கொள்ள ஒரு
முறையாவது வந்துவிடு
என் உயிரின் சொந்தக்காரியே...

1 comment:

vasan said...

இர‌விலும்,இருளிலும்,இறுதியுலும்
தேடி மிக வாடி திரித‌லிலும்,
க‌ளம் மாறி, புல‌ரும் காலையில்,
க‌ண்விழிக்கும் ம‌ல‌ரிலும்,
க‌ரையும் ப‌னித்துளியிலும்
காண‌ முய‌லுங்க‌ளேன்,
உத‌ய‌ம் தந்த‌ உத்த‌மியை.